Connect with us

மாஸ்டர் JD டு கமல் விக்ரம்.. இதை கவனித்தீர்களா?..

vi kamm 1

Entertainment

மாஸ்டர் JD டு கமல் விக்ரம்.. இதை கவனித்தீர்களா?..

கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் விக்ரம். இந்த படத்தில் பகத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.கமலஹாசன் அரசியல் தொலைக்காட்சிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு முழுவீச்சாக சினிமாவில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கமலின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விக்ரம் படம் அவற்றை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகியுள்ளது.

lo

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் கமலஹாசன் ஒரு இளைஞனைப் போல அதே எனர்ஜியுடன் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது படப்பிடிப்பு வரை லோகேஷ் மறைத்து வைத்திருந்த இந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரிந்த நாளில் சூர்யா இடம்பெற்றிருந்த காட்சியை வைத்திருந்ததால் மேலும் இந்த படத்தில் சுவாரஸ்யம் தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் மொத்தம் 203 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 83 நிமிடம் ஓடக்கூடிய நீளமான திரைப்படம் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் அதிகாலை 4 மணி முதல் காட்சிகளின் முன்பதிவு பல திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.அந்தளவிற்கு ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகின்னர்.

KAM 2

விநாயகர் சதுர்த்தியை டார்கெட் செய்யும் சிவகார்த்திகேயனின் புதிய படம் !!

லோகேஷ் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஒரு ஆங்கில பாடல் வைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அதை போலவே இப்படத்திலும் கமல்ஹாசனுக்கு ஒரு ஆங்கில பாடலை வைத்துள்ளார். Wasted Lyric என தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முன்னதாக லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் விஜய் எப்போதும் போதையில் இருப்பது போல கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். இந்த பாடலிலும் உலகநாயகன் கமல்ஹாசன் கதாபாத்திரம் குடிக்கு அடிமையாகி எப்போதும் போதையில் இருப்பது போல ஒரு தோற்றத்துடன் அமைந்துள்ளது. தற்போது கமல்ஹாசனையும் இதுபோல தான் காட்டியுள்ளனர். இதனால் மாஸ்டர் படத்தில் முதலில் குடிக்கு அடிமையான விஜய் குடியை நிறுத்தி எதிரிகளை அழிப்பது போல,ஆண்டவரும் அதேதான் செய்வாரோ ,கதையும் ஒரே மாதிரிதான் வருமோ என இந்த பாடலை பார்க்கும் பொழுது குழப்பமடைய செய்துள்ளது.இது சற்று ரசிகர்களை பீதி அடைய செய்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top