நெகடிவ் விமர்சனம் பற்றி மனம் திறந்த மாஸ்டர் இயக்குநர்

384204a9ff4393ddd7032af8221d4eb9

மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முதல் முறையாக தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி தற்போது வரை உலகளவில் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இருந்தாலும் மாஸ்டர் திரைப்படம் குறித்து பல நெகட்டிவ் விமர்சனங்கள் பல தரப்பில் இருந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதில் ” விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாசிட்டிவ், நெகட்டிவ் என எப்படி விமர்சனம் வந்தாலும் ஏற்க வேண்டும். அதுமட்டுமின்றி மாஸ்டர் திரைப்படம் பிடித்திருக்க போய் தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள் ” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.