இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கொரொனா லாக்டவுன் ஏற்பட்டதால் தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் ஆக வேண்டிய படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்த படமாக இது விளங்குகிறது.
காய்ந்து கிடந்த தியேட்டர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தால் எழுச்சி பெற்றுள்ளது என கூறலாம். இந்த படம் வந்த பிறகுதான் கொரோனா பயம் எல்லாம் சற்று விலகி மக்கள் தியேட்டருக்கு வர துவங்கியுள்ளார்கள்.
ஒன்னரை வருடமாக விஜய் படம் வரவில்லை என்றாலும், கொரோனா முடக்கம் காரணமாக எங்கும் செல்ல முடியாத ரசிகர்கள் தங்கள் தலைவர் படம் வந்த உடன் அதை உற்சாகமாக கொண்டாடினார்.
கடந்த போகி அன்று வெளியிடப்பட்ட இப்படம் அனைத்து நாடுகளிலும் ரிலீஸ் ஆனது. எல்லா நாடுகளிலும் பயங்கர வசூலை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது இப்படம்.
இதன் மூலம் உலக அளவில் நல்ல வசூலையும் வெற்றியையும் பெற்று நம்பர் 1இடத்தில் இருப்பதாக படக்குழுவினரால் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகிறது.