தளபதி 66 பஸ்ட் லுக் போஸ்டர் குறித்த மாஸ் அப்டேட் …. இதோ !!..

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்த படம் வசூலிலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

download 82

தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்துவருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2 நடிக்க போவது இவர்களா?… அசத்தல் அப்டேட்!!…

vijay66 tile 1649140330 1

இந்நிலையில், இப்படத்தில் சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது என தகவல்கள் வெளியாகியது. விஜய்க்கு நடனம் எப்படியோ அதுபோல்தான் சண்டை காட்சிகளும் மாஸ் சீன்களும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் விஜயிடம் பிடித்த ஒன்று .

அந்த மாஸ் சீன்கள் எதுவும் இல்லாமல் ரசிகர்களிடம் இப்படம் எடுபடுமா என பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். விஜய் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பெரும்பாலும் அவரது பிறந்த நாளில் வெளிவருவது உண்டு.

220609 66 1

அதன்படி தளபதி 66 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் விஜய் பிறந்த நாளில் கண்டிப்பா வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் பிறந்தநாளில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தால் கண்டிப்பா அது விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையும். தளபதி 66 படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment