தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் , தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தி கிரே மேன்’ படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது.
அதற்கு அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.
அதை தொடர்ந்து அவரது அண்ணனும் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். வி க்ரியேஷன் கலைப்புலி எஸ். தாணு படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போழுது தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சித்தரும் தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி ஹீரோயினுடன் போட்டி போடும் அளவிற்கு மாறிய குஷ்பு! பாக்கவே வேற லெவல்!