விஜய் மற்றும் அஜித் படத்தை பற்றி எஸ் ஜே சூர்யா சொன்ன மாஸ் அப்டேட்..

எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வில்லனாகவும் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி நடை போடுகிறார் .

surya 1

1999 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் அஜீத் நடித்து வெளியான வாலி திரைப்படம் அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர்.270 நாட்கள் திரையில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது

அதை தொடர்ந்து 2000 இல் விஜய்யை வைத்து இயக்கிய குஷி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

sjsurya kushi vaali 1

அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்பு இசை என்ற படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்துள்ளார்.

இப்படி பல வெற்றி படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா தற்போது படங்களை இயக்காமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1 377

இவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இச்சூழலில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் வாலி இரண்டாம் பாகம் மற்றும் குஷி இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் ஒரு வேளை நீங்கள் படத்தை இயக்க இருந்தால் முதலில் குஷி 2-ம் பாகம் அல்லது வாலி 2-ம் பாகம் இதில் எது முதலில் வரும் என கேட்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முன் நயன்தாரா ஆசையா கேட்ட விஷயம் !! நடந்ததா.. இல்லையா ?..

அப்போது அவர் இரண்டு படத்தையும் இயக்கும் ஐடியா இருக்கிறது. ஆனால் கதை இன்னும் எழுதவில்லை என கூறியுள்ளார். எஸ் ஜே சூர்யா சொன்ன இந்த தகவலால் அஜித் மற்றும் விஜய் என இரண்டு தரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். மீண்டும் நீங்கள் படத்தை இயக்கி வெற்றி காண வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment