Connect with us

பள்ளி மாணவர்களுக்கான பக்காவான அறிவிப்பு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்;

anbil 1200

Tamil Nadu

பள்ளி மாணவர்களுக்கான பக்காவான அறிவிப்பு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்;

இன்றைய தினம் நம் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பல்வேறு விதமான அறிவிப்புகளை கூறியுள்ளார். அதுவும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்புகளாக காணப்படுகிறது.

அதன்படி மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மை குழு துனையுடன் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மாணவர்களுக்கு தொழில்நுட்பம், கணினியில் ஆர்வம் ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள், எந்திரனியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மாணவர்களிடம் தலைமை பண்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை வளர்க்க சாரண சாரணியர் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். மேலும் 3 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் வெளிவரும் என்றும் கூறினார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த STEM என்னும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். தேவைப்படும் மாணவர்களுக்கு தலைமையாசிரியரின் பரிந்துரைப்படி வல்லுநர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top