இனிமேல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்! விடுதி மாணவர்களுக்கும் பல கட்டுப்பாடுகள்!!

தென் ஆப்பிரிக்க நாட்டு தோன்றி உலகமெங்கும் வளர்ந்து கொண்டு வருகிறது ஒமைக்ரான். இதனால் இந்தியாவிலும் இந்த நோய் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருகிறது. ஆயினும் நம் தமிழகத்திலும் ஒமிகிரான் பரவல் இல்லை என்று கூறப்படுகிறது.

நம் தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம் என்ற வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி கொண்டு வருகிறது. அதனை தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

சுப்பிரமணியன்

மாணவர்களின் பாதுகாப்பு பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதன்படி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கல்வி நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் இத்தகைய அறிவுரைகளை வழங்கினார்.கொரோனா விடுதிகளில் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

உணவுக் கூடத்தில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டமாக கூடும் கலை நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment