ஜனவரி 1 முதல் திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடு: தேவஸ்தானம் அறிவிப்பு!

ஜனவரி 1 முதல் திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடு: தேவஸ்தானம் அறிவிப்பு!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கோடிக்கணக்கில் தினமும் கொரோனா பரவி நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருசில மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு, ஜனவரி 2ஆம்தேதி வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு மிகப் பெரிய கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து ஜனவரி 1-ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார். இதனையடுத்து திருப்பதி செல்லும் பக்தர்கள் மறக்காமல் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.