மாஸ்க் இல்லன்னா ஜெயில் தான் அதிரடி அறிவிப்பு!
கொரோனோ தொற்றானது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. இதற்காக தமிழ் மாநிலத்தில், மாநிலங்களுக்கிடையேயான இ பாஸ் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் அமல்படுத்தியது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் இன்னசென்ட் திவ்யா. அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” இனி முக கவசம் இன்றி வருபவர்களுக்கு அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை எனவும் கூறினார்”.
மேலும் அவர் முக கவசம் இன்றி நடக்கும் நபர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் அவர் இதுவரை மொத்தம் முக கவசம் இன்றி வெளிவந்தவர்களிடம் அபராத தொகையாக 30 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வசூலிக்க பட்டதாகவும் கூறினார்.
