கடந்த ஒரு வாரமாக நம் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பதிவாகி கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நேற்றைய தினம் 2,500 தாண்டி கொரோனாவின் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் சென்னையில் அனைத்து இடங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக பேருந்துகளில் பயணிகள் மட்டுமின்றி நடத்துனர், ஓட்டுநர்களும் கட்டாய மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் அபராதம் ஐநூறு ரூபாய் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் பிரபல சுற்றுலா தளம் ஒன்றில் மாஸ்க் அணியாத நபர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் மாஸ்க் கனியாத சுற்றுலா பயணிகள் அருவி பகுதிகளில் செல்ல தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பார்ப்பதற்கு கூட மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.