Connect with us

நாயினர் நாகேந்திரன் கருத்துக்கு மார்க்சிஸ்ட் மாநில பொது செயலாளர் கண்டனம்!!

cpim twitter

தமிழகம்

நாயினர் நாகேந்திரன் கருத்துக்கு மார்க்சிஸ்ட் மாநில பொது செயலாளர் கண்டனம்!!

நேற்றைய தினம் சட்டப்பேரவையில் பெரும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதில் பாஜக எம்எல்ஏவான நாயினர் நாகேந்திரன் தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படும் என்று கூறினார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நேற்றைய தினம் அவர் கூறிய கருத்து இன்று வரையும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என நாயினர் நாகேந்திரன் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சிபிஎம் கூறியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் மாநிலத்தை துண்டாட துணித்து விட்டது பாஜக என்று மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாஜக மாநில ஆட்சியைப் பிடிக்க ஜனநாயக விரோத யுக்திகளை கையாண்டு கொண்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கூறியுள்ளார். இது போன்று அவரின் கருத்துக்கு பதில் கருத்தினை தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கூறிக்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top