Connect with us

குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வலியுறுத்தல்;;

balakrishnan marxist 1618575235 1646910158

தமிழகம்

குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வலியுறுத்தல்;;

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 3-வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் அப்பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 144 தடை விதிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதோடு வன்முறை சம்பவங்களில் பள்ளி நிர்வாகத்தின் ஆதரவாளர்கள் ஈடுபட்டார்களா? என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்றும் வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி அப்பாவி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top