பிக்பாஸ் சினேகனுக்கு திருமணம்: தமிழ் நடிகை தான் மணப்பெண்!

e95760b8dec57ac1c2e292b3d0053bf1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பாடலாசிரியர் சினேகனுக்கு தமிழ் நடிகை ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய புகழ்பெற்ற பாடலாசிரியர் சினேகன், அதன்பின் அந்த நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இணைந்தார். அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வரும் சினேகன், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சினேகன் மற்றும் நடிகை கன்னிகா திருமணம் ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தற்போது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த திருமணத்தை கமல்ஹாசன் நடத்தி வைப்பார் என்றும் அவர்கள் தலைமையில் தான் இந்த திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.