ஒரே ஒரு டிஜே. மொத்த கல்யாணமும் க்ளோஸ்!
தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டியில் திருமணத்திற்கு முந்தைய நாள் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த டிஜேவால் திருமணம் நின்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி அருகே உள்ள பெரிய காட்டு பாளையம் என்ற ஊரைச் சார்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ரீதர்.
இவருக்கும் அதே ஊரை சார்ந்த ஜெயசந்தியா என்ற பெண்ணுக்கும் ஜனவரி 19 ஆம் தேதி திருமண வரவேற்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்க எண்ணி பெண் வீட்டார் டிஜேவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அந்த டிஜேவில் மணமகளுடன் பலரும் கைகோர்த்து நடனமாட ஸ்ரீதர் கடுப்பாகி அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
அங்கிருந்த வெளியேறிய மணமகன் மேடையில் கடுப்பாகி உட்கார்ந்து இருந்துள்ளார், அதன்பின்னர் மணமகள் மேடைக்கு வந்ததையடுத்து அவரிடம் ஏன் இப்படி குடித்துவிட்டு உன்மேல் கை போட்டு நடனம் ஆடுகிறார்கள்.
இது எல்லாம் எனக்குப் பிடிக்காது என்று கூற, மணப்பெண் வீட்டார் கடுப்பானதுடன் மணமகனைத் தாக்கி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
அதன்பின்னர் அதேநாளில் வேறு ஒரு பையனுடன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் ஸ்ரீதர் இதுகுறித்துப் போலீசில் புகார் அளித்துள்ளார்.
