எங்க கல்யாணம் நாட்டுக்கு தேவையா..? – தயாரிப்பாளர் ரவீந்தர் காரசார பேட்டி!!

கடந்த சில தினங்களுக்கு முன் நடைப்பெற்ற சன் டிவி புகழ் மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணமானது சினிமா வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியது. குறிப்பாக உருவங்களை கடந்த காதல் என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

அதே சமயம் மற்றொரு நபர்களோ பணத்திற்காக இப்படியா செய்வது? என மகாலட்சுமியிடம் கேள்வி எழுப்பினர். இருப்பினும், இதனை கண்டுகொள்ளாத ஜோடி அவரவர் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையம் செய்தியாளர்களை சந்தித்த ரவீந்தர் பேசுகையில், ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது நாட்டுக்கு ரொம்ப முக்கியமாகவே? கிடையாது என கூறினார்.

சில தினங்களுக்கு முன் முக்கிய பிரபலத்திற்கு நடைப்பெற்ற திருமணம் வீடியோ, ஓடிடியில் பெறாத வருமானத்தை விட எங்களது திருமணமானது பேசும் பொருளாக மாறியது வித்தியாசமான செயல் என கூறினார்.

அதே போல் நான் டால்மியாபுரத்தில் உள்ள எனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்துள்ளதாகவும், நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment