ரூ 5000: நரிக்குறவர் மற்றும் சீர்மரபினரின் திருமண உதவித்தொகை உயர்வு; தமிழக அரசு உத்தரவு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவை மக்களுக்கு மிகக் கவனமாக வைத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் நிறுவனத்தில் வெளியான ஜெய்பீம் படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து சலுகைகளும் நம் தமிழகத்தில் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகிறது.

நரிக்குறவர்

இவை நம் தமிழகத்தின் சமநிலையை நிலைநிறுத்தும் வகையில் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் நல சமுதாயத்திற்கு 5000 ரூபாய் உதவித் தொகையாக அறிவித்துள்ளார்.

குறிப்பாக இது அவர்கள் திருமணத்திற்குரிய தான உதவித்தொகை உயர்வாகும். அதன்படி தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment