Tamil Nadu
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்: தமிழக அரசு அறிவிப்பு!
12-ம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தமிழக அரசு சட்டம் அறிவித்துள்ளது. அதன்படி
* 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் சராசரி ) – 50 சதவீதம்
* 11ம் வகுப்பு பொதுத்தேர்வு( ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) -20 சதவீதம்
* 12ம் வகுப்பு செய்முறை தேர்வு / அகமதிப்பீடு – 30 சதவீதம்
*பிளஸ் 2 வகுப்பில் ஒவ்வொர பாடத்திலும் செய்முறை தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில்(10) என மொத்தம் 30க்கு பெற்ற மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுக்கப்படும்
*செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10)பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கிடப்படும்.
* கோவிட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு, அவர்களின் 11ம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
* 11 மற்றும் 12ம் வகுப்பு செய்துமுறை தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ம் வகுப்பு 11ம் வகுப்பு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில், 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது
