ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபமாகத் தெரியும் அதிசய மலை….! தொலைநோக்குப் பார்வையில் இறைவனை வேண்டுவது எப்படி?

மலர்ந்து மணம் பரப்பும் இனிய காலைப் பொழுது என்றால் அது மார்கழி மாதம் தான். இந்த மாதம் தான் காலையிலேயே கோவில்களில் பக்தி மணம் கமழும். எங்கும் அன்பர்கள் கூட்டம் நம்மை மெய்மறக்கச் செய்யும். ஆண்டுக்கு ஒருமுறையாவது இப்படி ஒரு பக்தியை நாட வைத்துள்ளனரே நம் முன்னோர்கள் என்று இந்த வேளையில் அவர்களுக்குத் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இன்று (20.12.2022) மார்கழி 5. மாணிக்கசுவாமிகள் எழுதிய 5ம் நாள் பாடல் இது.

Markali 5
Markali 5

இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் மாலறியா நான் முகனும் காணா மலையினில் என திருவண்ணாமலையார் பற்றி பேசுகிறார். இங்குள்ள சிவனுக்கும் இந்த மலைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. சிவனே மலையாகி உள்ளார். இந்தப்பாடலில் மேலே போய் தேடினார் பிரம்மா.

அவருக்கும் கிடைக்கல. கீழே போய் தேடினார் நாராயணர். அவருக்கும் கிடைக்கல. கல்வி, செல்வத்தால் செருக்கு இருந்தால் அங்கு இறைவன் வர மாட்டார் என்ற தாத்பரியத்தையே இந்த திருவண்ணாமலை உணர்த்துகிறது. அன்பு ஒன்றே இறைவனை போய்ச் சேர வழி.

நினைத்தாலே ஒரு தலம் முக்தி தரும் என்றால் அது திருவண்ணாமலை தான். அக்னி பிழம்பாக எம்பெருமான் வீற்றிருக்கின்றார் என்றால் அது திருவண்ணாமலை.

திருக்கைலாய யாத்திரையில் ஒவ்வொருவருக்கும் அந்த மலை ஒரு ரூபமாகத் தோன்றும். அதே போல திருவண்ணாமலையிலும் பார்க்கலாம். இங்கு கிரிவலம் போகும்போது துவங்குகிற இடத்தில் பார்த்தால் ஒரு மாதிரி இருக்கும். லிங்கங்கள் கிட்ட போய் பார்த்தால் அங்கு ஒரு வித வண்ணமாகத் தெரியும். ஒவ்வொரு முறையும் இறைவன் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருவார்.

மேகங்கள் அந்த மலைக்குப் பின் தருகிற காட்சி வாயால் சொல்லி விவரிக்க முடியாத பேரானந்தத்தைத் தருபவை. கிரிவலம் மட்டுமின்றி தீபத்திற்கும் சிறப்புடையது இந்த திருவண்ணாமலை. மலை மேல் ஏற்றும் ஜோதி மனதிற்குள் உள்ள ஆத்ம ஜோதியாக விளங்குகிறது.

எங்கிருந்தாலும் பக்தர்களை ஈர்த்து தன்னகத்தே வைத்துக் கொள்கிறார் என்பது தான் இந்தத் தலத்தின் சிறப்பு. இந்தப் பாடலில் சிவனே சிவனே என்று ஓலமிடினும் உணராய்…இத்தனை முறை கூப்பிட்டு கூட நீ உணரவில்லையே பெண்ணே…நீ உணர்வதற்கு வா என அழைக்கிறார்.

சிவனை வழிபட வாங்க. அவருடைய நாமத்தை உள்ளன்போடு கலந்து சொல்ல சொல்ல அதுவே நமக்கு பேரின்பத்தைப் பெற்றுத் தரும் என்ற கருத்தையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.

அடுத்து ஆண்டாள் நாச்சியாரின் திருவெம்பாவை 5ம் பாடல்.

Thiruvembavai 5
Thiruvembavai 5

மாயனை …..என்று தொடங்குகிறது.

கிருஷ்ணர் ஒரு மாயன். பிறவிப்பிணியில் இருந்து காப்பாற்றக்கூடியவர். ஏற்கனவே நாங்கள் செய்த பிழையும், இப்போது நாங்கள் செய்யக்கூடிய பிழையும் தீயினில் இட்ட தூசு மாதிரி பொசுக்கி விடு என்று சொல்கிறார்.

துன்பத்துக்குக் காரணம் வினை. வினை இருந்தால் தான் துன்பம் வரும். அதனால் அந்த வினையை வேருடன் நீக்க வேண்டும். அதனால் அந்த வினைகளை எடுக்க நெருப்பில் இட்ட தூசி மாதிரி மாற்றி விடு. எனக்குப் பிறவிப்பிணியை நீக்கி விடு.

ஒரு காலத்துல வர்ற பிரச்சனைக்கு இப்போது கடவுளிடம் யாரும் வேண்டுவதில்லை. சிலர் தான் அப்படி வேண்டுறாங்க. எல்லாருக்கும் இப்ப என்ன தேவையோ அதையே கடவுளிடம் வேண்டுவாங்க.

Ramar and Vaali
Ramar and Vaali

வாலி ராமபிரானிடம் சுக்ரீவனை மன்னித்தருள வேண்டும் என்றும் கேட்கிறார். தான் செய்த வினைப்பயனை அனுபவித்து கஷ்டப்பட்டாலும் ஒருவகையில் தம்பி சுக்ரீவனுக்கு நன்றி சொல்கிறார். அவரால் தானே இறைவனடியை அடைய முடிந்தது என்று. தம்பியின் எதிர்கால வினைகளுக்கு நிவாரணம் கேட்கும் அந்த உள்ளம் மிகப்பெரியது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews