ஆன்மா என்பது உண்மையான அடியாராக இருக்க வேண்டும்…மாணிக்கவாசகரின் முத்தான வரிகள் இதோ…!

மார்கழி மாதம் ரம்மியமான மாதம். இந்த மாதத்தில் தெய்வீகத்துடன் இயற்கை மணம் கமழ உலக அறிவார்ந்த விஷயங்களையும் நாம் கற்றுக் கொள்கிறோம். இதற்கு தான் திருவெம்பாவை, திருப்பாவை பதிகங்கள் நமக்குப் பயன்படுகிறது. அந்த வகையில், மார்கழி 3 ம் நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய பாடல் இது.

Thiruvembavai 1 1
Thiruvembavai 1

இந்தப் பாடலில் மாணிக்க வாசகர் ஆரம்பிக்கும்போதே சொல்கிறார் முத்தண்ண…வெண் நகையாள் என்று.

இந்த உலக மக்கள் எல்லாருமே மகிழ்ச்சியா இருக்கணும்கறதுல யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. நாம தூங்குறோம். தூக்கத்துல இருந்து எழும்போது கோபம் கோபமா வருது. தூங்கும்போது ஒரு இன்பம்னா எழுந்து உண்ணும்போது இன்பம். இயற்கைக் காட்சிகளைக் காணும்போது இன்பம்.

Manickavasagar
Manickavasagar

ஒருவருடன் பேசும்போது இன்பம். நடனமாடுவதில் இன்பம்…இப்படி எல்லா இன்பங்களையும் விழித்திருக்கும் போது தான் பெற முடிகிறது. தூங்கிக்கிட்டே இருந்தால் எப்படி பெற முடியும்? ஒரு இன்பத்தை இழந்தால் தானே இன்னொரு இன்பத்தைப் பெற முடியும். அதனால் தான் மாணிக்கவாசகர் சொல்கிறார். தோழி…தூங்கிக்கிட்டே இருக்கப் பாரு. அதை விட்ரு.

பேரின்பம் என்ற இறைவனடி தொழுவதற்கு எழுந்து வா..என்று அழைக்கிறார். அதற்கு பழமையான அடியார் நீங்கள். வருகின்ற அடியார்களுக்கு அடியார்களின் தன்மை என்ன என்பதைக் கத்துக்கொடுக்கணும். அடியார்னா நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம், திருமண் இருக்க வேண்டும். இதை வைப்பதால நமக்கு என்ன நலன் என்பது ஒரு அடியார்க்கு கண்டிப்பாகத் தெரிய வேண்டும்.

ருத்திராட்சம் அணிந்து கொள்வது நலம். அதை அணிந்தால் அதற்குரிய தகுதிகளோடு அணிந்து கொள்ள வேண்டும். அது நம்மோடு இருக்கும்போது சிவனே நம்மோடு இருக்கிறார் என்பதை உணர வேண்டும். சிவநாமத்தை இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாமம் சொல்லி சொல்லி அந்த நாமத்தால் அந்த அடியார் உயர்வடைய வேண்டும். இறைவனைக் கண்டால் அடியார்கள் பணிந்து வணங்க வேண்டும்.

சிவபெருமான் பாடல்களைக் கேட்டால் ரசித்து அதில் திழைப்பது, ஆலயத்திற்கு சென்று தொண்டு செய்வது என்று அடியார்க்கு நிறைய குணங்கள். இந்தப் பாடலில் நான் சின்னப்பொண்ணு. கொஞ்சம் முன்ன பின்ன தான் இருப்பேன். நீங்க பழம்பெரும் அடியார். எல்லாம் தெரிஞ்சவங்க. எனக்கு சொல்லிக்கொடுங்க…நான் வர்றேன் என்று தோழி பதில் சொல்கிறாள்.

ஆன்மா என்பது உண்மையான அடியாராக இருக்க வேண்டும் என்ற அழகான தாத்பரியத்தை இந்தப் பாடல் மூலம் மாணிக்கவாசகர் உலகுக்கு எடுத்துரைக்கிறார்.

ஓங்கி உலகளந்த உத்தமன் என ஆண்டாள் இறைவனைப் பற்றி சொல்கிறார்.

Thiruppavai 3
Thiruppavai 3

அவரை நாம் வணங்கினால் நமக்கு எல்லா நலனும் கிடைக்கும். குறிப்பாக மலை வளம் இருந்தால் தான் மழை பொழியும். விவசாயம் நல்லா செழிக்கும். தேவையறிந்து மழையை நமக்குக் கொடுக்கணும் என்றும் அப்படி இருந்தால் தான் விவசாயி நல்லா இருக்க முடியும். ஒரு நாடு நலம் பெறணும்னா அந்த நாட்டுல எல்லா தொழில்களும் நல்லா இருக்கணும்.

Aandal
Aandal

குறிப்பா விவசாயம் ரொம்ப நல்லா இருக்கணும். அப்போ தான் எல்லா தொழில்களும் நல்லா இருக்கும் என்கிறார் ஆண்டாள். விவசாயம் செய்வோருக்குக் கூர்த்த மதி முக்கியமாக வேண்டும். விவசாயி நல்லா இருந்தால் தான் ஒரு நாடு நல்லா இருக்கும். அப்போது தான் அந்த நாட்டின் தலைவனை வாழ்த்துவார்கள். அதற்கு மலை, மழைவளம் வேண்டும் என்கிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.