12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் – தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!

பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது –

12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன் பின்னர் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் அவற்றை பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதன் விவரங்களை இயக்குனராகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு அதன் பிறகு வழங்கப்படும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.