பார்க்கும் போது சில்க் மாதிரி இருக்கு. ரொம்ப ஹேப்பின்னாங்க… டிக்டாக் வீடியோவுக்கு 4 லட்சம் வரை லைக்ஸ்…!

மார்க் அண்டனி படத்தில் கவர்ச்சித் தாரகை சில்க் நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் அனைவரக்கும் தூக்கி வாரிப் போட்டது. அது எப்படிடா இறந்து போனவங்க உயிரோட வருவாங்கன்னு பார்த்தாங்;க. ஆனா படத்தைப் பார்த்தா மெய்யாலுமே சில்க் மறுபிறவி எடுத்த மாதிரி தான் இருந்துச்சு. அவங்க பேரு விஷ்ணு பிரியா. இனி அவங்களே என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

silk2
silk2

மார்க் அண்டனி படத்தில் சில்க் கேரக்டரி;ல் நடித்து அசத்தியவர் விஷ்ணு பிரியா. சில்க் சுமிதா மாதிரி இருக்கறதுதான் காரணம். சோசியல் மீடியால தான் சில்க் சுமிதா மாதிரி நடிக்கச் சொன்னாங்க. மார்க் அண்டனிக்கு முதல்ல டைரக்டர் சார் என்னைக் கூட்டிட்டு வந்தாரு. சில்க் சுமிதா மாதிரி பண்ணனும்னாங்க. அவங்களுக்காக இந்த மூவில நான் என்ன பண்ண முடியுமோ அதைக் கொடுத்துருக்கேன்.

முதல்ல இந்தப் படத்தோட டைரக்டர் என்னைக் கூட்டிட்டு வர்றாரு. சடர்னா கூப்பிட்டு கார்ல ஏறுங்க. உட்காருங்கன்னாரு. டைரக்டர் சார் என்னைக் கூட்டிட்டு வர்றாரு. நான் காஸ்டியூம் எல்லாம் போட்டு ரெடியா இருக்கேன். சார் பக்கத்துல இருக்காரு. சொல்லிக்கிட்டே இருக்காரு. கார்ல இருந்து இறங்குறேன். கை எல்லாம் ஷிவர் ஆகுது.

சிலுக்குன்னு நினைச்சி எங்கிட்ட பேசுவாங்க. என்னைப் பார்க்கும்போது 2கே சில்க் மாதிரி இருக்கு. ஹேப்பியா இருக்குன்னு சொல்வாங்க. அவங்க 1996 டிசம்பர் 3ல இறந்தாங்க. நான் 1997 டிசம்பர் 13ல பிறந்;தேன். அவங்களும் ஆந்திரா தான். நானும் ஆந்திரா தான். முதல்ல டப்ஸ் மேச்னு ஒரு ஆப் வந்தது. அப்புறம் மியூசிகலி வந்தது. அதுல வீடியோ போட்டேன். சில்க் மாதிரி இருக்கீங்கன்னாங்க.

டிக் டாக்ல சில்க் மாதிரி இருக்கீங்கன்னாரு. உடனே சில்க் மாதிரி ஒரு சாங்குக்கு வீடியோ போட்டேன். முதல் நாள்ல மட்டும் 11கே லைக்ஸ் வந்துட்டு. 20 நாள்ல 400 கே லைக்ஸ் வந்துட்டு. ரொம்ப வைரலானதும் இது எங்கே தப்பா போயிடுமோன்னு கம்மி பண்ணிட்டேன். எனக்கு எந்த நெகடிவ்வுமே வரல.

Original silk
Original silk

சில்க் மாதிரி கிளாமரா நடிக்கணும்னு இல்ல. பாசிடிவ்வா தான் நடிக்கணும். நான் ஈரோடு போன போது சில்க்குக்கு அப்புறமா உங்களைப் பார்க்கும் போது ஹேப்பியா இருக்குன்னு சொன்னாங்க. தப்பா நினைக்காதீங்க. நீங்க சில்க் மாதிரி இருக்கீங்கன்னுல்லாம் சொன்னாங்க.

எங்க அம்மாவுக்கு சில்க்னா ரொம்ப பிடிக்கும். அவங்க நல்லா ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொல்லி சப்போர்ட் பண்ணாங்க. ரசிகர்கள் கேட்டது ஒண்ணு தான். நீங்க சில்க் மாதிரி ஒரு படமாவது பண்ணனும்னாங்க. நான் சின்ன வயசுல பேசக்கூடாதுன்ற சாங் கேட்டுருக்கேன். ரொம்ப பிடிக்கும்.

எனக்கு ரஜினி சாரை ரொம்ப பிடிக்கும். அவங்க கூட நடிக்க சொன்னா நடிப்பேன். அம்மா சொல்வாங்க. இறந்தவங்க கடவுளுக்குச் சமம். அவங்க சமாதியைப் போயி பாருன்னு சொன்னாங்க. நானும் அதே மாதிரி சில்க் சமாதியைப் போயி பார்த்தேன். அதுக்கு அப்புறமா நடிக்க ஆரம்பிச்சேன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews