தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் ஹீரோவாக கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தின் சண்டை காட்சிகள் கல்குவாரியில் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் விஷாலுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.
மேலும், ஏற்கனவே லத்தி படத்தில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கேரளாவில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.