மரியுபோல் இன்னும் உக்ரைன் வசமே உள்ளது : ஜெலன்ஸ்கி அறிவிப்பு !!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.

ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி முதல்  உக்ரைன் மீது குண்டு மழை பெய்து  வருகிறது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் ரஷ்ய படைகளால் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று ரஷ்ய படைகள்  உக்ரைனில் வணிக நகரமான மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியதாக தெரிவித்தனர்.  இந்த சூழலில் மரியுபோல் நகரை ரஷ்யா முழுமையாக கைப்பற்றவில்லை என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி  தெரிவித்தார்.

குறிப்பாக மரியுபோல் நகரின் சில பகுதிகள் உக்ரைன்  வசம்  இருப்பதாக கூறினார். மரியுபோல் நகரின் முக்கிய இருப்பு தொழிற்சாலை உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதோடு மரியுபோல் நகரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  கூறியுள்ளார். மேலும், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment