தாம்பத்ய வாழ்க்கை பிரச்சினைகள் தீர காமன் வழிபாடு

ebbcd7df3dd91698bdf4c005f08c8c19-3

பலருக்கு திருமணம் ஆனாலும் தாம்பத்ய ரீதியான பிரச்சினைகளால் குழந்தை பிறப்பு தள்ளிப்போகுதல் சரியான தாம்பத்யம் இல்லாத காரணத்தால் மனைவியுடன் சண்டை போடுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரும். இதனால் தற்காலத்தில் விவாகரத்து வரை கூட பிரச்சினைகள் நடக்கிறது. இது போல பிரச்சினைகள் தற்காலத்தில் ஏராளம் நடக்கிறது.

இது போல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல வழிபாடுகள் கூறப்பட்டாலும் காமன் வழிபாடே சிறந்தது என சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். புராணங்களில் வரும் மன்மதனைத்தான் காமன் என்கிறார்கள். காமன் பண்டிகை விழா பல ஊர்களில் கிராமங்களில் இன்றும் கொண்டாடப்படுகிறது.

காமனை வணங்கினால் தாம்பத்யம் சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்து சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல் தாடிக்கொம்பில் செளந்தர்ராஜ பெருமாள் கோவில் உள்ளது. அங்குள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வணங்கினால் சீக்கிரம் திருமணம் நடக்கும் தாம்பத்ய ரீதியான பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.

காஞ்சிபுரத்தில் உள்ள வராகீஸ்வர கோவில் காமேஸ்வரம் என அழைக்கப்படும் இக்கோவிலில் மன்மதன் வழிபட்டு எண்ணிய வரங்களை பெற்றமையால் இங்கு உள்ள இறைவனுக்கு மன்மதேஸ்வரர் என பெயர் இங்குள்ள இறைவனை வணங்கினால் தாம்பத்யரீதியான பிரச்சினைகள் சரியாகி விடும் என்பது நம்பிக்கை.

இப்படி தமிழ்நாட்டில் சில கிராமங்களில் கூட காமன் பண்டிகை விழா இன்னும் கொண்டாடப்பட்டு வருகிறது. காமனை வணங்கினால் இது போன்ற பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.