Connect with us

வாழ்வாதாரம் தேடி தப்ப முயன்ற மக்களை பிடித்த கடற்படை வீரர்கள்!!!

srilanka coast guard1

செய்திகள்

வாழ்வாதாரம் தேடி தப்ப முயன்ற மக்களை பிடித்த கடற்படை வீரர்கள்!!!

உலகளவில் இலங்கையானது பெரும் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. மேலும் இலங்கையில் பணம் வீக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இலங்கைக்கு உதவ ஒவ்வொரு நாடுகளும் முன்வந்து கொண்டு வருகின்றன.

முதலில் இந்தியா தான் வரிசையாக இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையும், எரிபொருட்களையும் கப்பல்கள் வழியாக அனுப்பியிருந்தது. அதன் பின்னர் அமெரிக்கா நாடுவும் உதவிகளை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அமெரிக்கா உயர்மட்ட குழு இலங்கைக்கு வருகை புரிவதாகவும் தகவல் கிடைத்தன. இந்த நிலையில் அங்குள்ள மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் வேறு வழியின்றி அண்டை நாடுகளுக்கு தப்பித்து செல்ல வேண்டும் என்ற முயற்சியில் அதி தீவிரமாக ஈடுபட்டனர்.

அதன் எதிரொலியாக தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. முதலில் அவர்கள் முகாமில் வைக்கப்பட்ட நிலையில் பின்பு இலங்கை கடற்படையாள் தப்பிக்க முயல்வோர் மீட்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தப்பித்து செல்ல முயற்சி செய்தபோது பிடிபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வாழ்வாதாரம் தேடி இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வெளியேறும் என்ற குழந்தைகள் உட்பட 47  பேரை இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top