பல மாதங்களுக்கு பின்பு தற்போதுதான் இயல்பான சூழ்நிலை நிலவி கொண்டு வருகிறது. ஏனென்றால் பல மாதங்களாக தமிழகமே கொரோனாவின் பிடியில் மாட்டிக் கொண்டது போல காணப்பட்டது.
இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இணையதளம் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன.
இவை வகுப்பறையில் நடத்தும் அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வி நலனுக்காக இனி வாரம் சனிக்கிழமை அனைத்து பள்ளிகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் இந்த மாதம் 19ம் தேதி வருகின்ற மூன்றாவது சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.