உஷாரய்யா உஷாரு! தென் தமிழக மக்களே உஷாரு!! மார்ச் 14,15-ல் மிதமான மழை;
இன்று காலை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சியான அறிவிப்பொன்றை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறியுள்ளது. அதுவும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் மார்ச் 13ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று கூறியுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் தென் தமிழக மாவட்டங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மழை மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
