மப்பேடு முதல் பண்ணூர் வரை 4 வழிச்சாலை – அதிகாரிகள் ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு முதல் பண்ணூர் வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், மேற்பார்வைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, ​​நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஏ.எஸ்.விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் எஸ்.ஜே.தஸ்னவிஸ் பெர்னாண்டோ, உதவிப் பொறியாளர் பிரவீன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் , தலைமைப் பொறியாளர் ஆர்.சந்திரசேகர் இருவழிச் சாலை விரிவாக்கத்தின்போது வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய நாற்றுகளை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில் 8 கோடி மக்கள் பயன் : ஸ்டாலின்

தமிழக முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை மேற்கு கோட்டத்தில் வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், கீழச்சேரி செல்லும் 3 மாநில நெடுஞ்சாலைகள் ரூ.76 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.