முதல்வரின் கான்வே வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்த மேயர் ப்ரியா!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செல்லும் கான்வே வாகனத்தில் பொதுவாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தொங்கிக் கொண்டு செல்லும் நிலையில் இன்று முதல்வரின் கான்வே சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் சுனன்தீப் சிங் பேடி ஆகியோர் தொங்கிக் கொண்டு சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில் அடுத்த கட்டமாக சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வரின் கான்வே காரில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தொங்கியபடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பின் ஐஏஎஸ் அதிகாரியான சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் அவர்களும் கான்வே வாகனத்தில் தொங்கியபடி சென்றார்.

முதல்வரின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படை வீரர்கள் மட்டுமே தொங்கி வருவது வழக்கம் என்ற நிலையில் சென்னை மேயரே தொங்கிக் கொண்டு சென்றது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. இதுகுறித்த பொதுமக்களின் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.