Connect with us

ராசி இல்லாத நடிகையா ..? பூஜா ஹெக்டே ஆவேசம் !!

poojahegde41613717451

பொழுதுபோக்கு

ராசி இல்லாத நடிகையா ..? பூஜா ஹெக்டே ஆவேசம் !!

தமிழ் சினிமாவில் தளபதியுடன் பீஸ்ட் படத்தில் களமிறங்கி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியவர் பூஜா ஹெக்டே.

இவர் கடந்த 2012- ஆம் ஆண்டு முகமூடி படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் அல வைக்குந்தாபுராமுலு என்ற படத்தில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது மட்டுமில்லாது அவரது படவாய்ப்புகளும் குவியதொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் அரபிக் குத்துப்பாடல் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதாக பீஸ்ட் படநாயகி கூறியுள்ளார்.

இதனையடுத்து தோல்வி படங்கள் சினிமாவின் ஒரு அங்கம்தான் என கூறினார். தொடர்ச்சியாக 6 பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த பெருமை தனக்கு உள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது இவர் கபி ஈத் கபி தீபாவளி என்னும் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top