
உடல்நலம்
தினமும் பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பூண்டில் அதிகமான விட்டமின்கள், அயோடின், தாதுஉப்புக்கள் மற்றும் சல்பர் நிறைந்துள்ளது. இதனிடையே பூண்டின் மணத்திற்குக் சல்பர் காரணமாக அமைகிறது. இந்நிலையில் பூண்டில் பலவகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
பூண்டில் அலிசின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இந்த சத்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக ஜீரணமின்மை, காதுவலி, வாயுதொல்லை, முகப்பரு, ஊழச்சதை, இரத்த சுத்தமின்மை மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேபோல் மாரடைப்பு வருவதை தடுப்பது மட்டுமல்லாமல் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை குறைக்க உதவுகிறது. பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குறையும்.
மேலும், குப்பைமேனி இலையுடன் பூண்டு சாற்றை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறி நல்ல பலன் கிடைக்க பூண்டு உதவுகிறது.
