Connect with us

திருப்பத்தூர் மாவட்டத்தில் இவ்வளவு அறிவிப்பா!!! தொடங்கி வைத்தார் ஸ்டாலின்;

stalin new16

தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இவ்வளவு அறிவிப்பா!!! தொடங்கி வைத்தார் ஸ்டாலின்;

ஒவ்வொரு நாளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு விதமான கட்டிடங்களையும் நலத்திட்டங்களையும் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்றைய தினம் புதிதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்ததாக தெரிகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூபாய் 110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூபாய் 103.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூபாய் 13.66 கோடி மதிப்பிலான 6 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக நாட்டறம்பள்ளி வட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஏலகிரியில் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top