180 கி.மீ தென்கிழக்கில் மையம்… மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் நேற்று தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில் நாளை அதிகாலை புதுவை- ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடைப்பட்ட மாமல்லபுரம் கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தற்போது மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“மாண்டஸ் புயல்” – மெட்ரோ ரயில் சேவையில் மாற்றமா?

அதன் படி, மாமல்லபுரத்திற்கு 180 கி.மீ. தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரையில் 65-70 கி.மீ வேகத்தில், சில சமயங்களில் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில் சோகம்! சிலிண்டர்கள் வெடித்து 2 குழந்தைகள் பலி

அதே போல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.