மந்திரங்கள் எத்தனை முறை சொன்னால் பலிக்கும்

பொதுவாக ஏதாவது ஒரு இஷ்ட தெய்வ மந்திரத்தை நாம்  தினமும் சொல்லி வருகிறோம். சொல்லி முடித்த உடனோ சில நாட்களிலோ சிலருக்கு அந்த மந்திரத்தின் பலன் உடனடியாக கிடைக்கலாம் சிலருக்கு தாமதமாக கிடைக்கலாம். ஆனால் எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் அந்த மந்திரத்தை நாம் 1 லட்சம் முறை உருப்போட்டிருக்க வேண்டும்.

தினமும் 1008 108 என்ற முறையில் கூட சொல்லி வந்தாலும் அந்த 1 லட்சம் எண்ணிக்கையை எட்டும்போதுதான் அந்த மந்திரம் சித்தியடைகிறது.

அதற்கு பிறகு அந்த மந்திரத்தை ஜெபித்து சிறிது திரூநீறு கொடுத்தாலும் அந்த திருநீறுக்கு சக்தி அதிகம்.

இப்படியாக எந்த ஒரு மந்திரத்தையும் நாம் ஒரு லட்சம் முறை சொல்லி இருக்க வேண்டும். 1 லட்சம் முறைக்கு மேல் சொன்னால்தான் அந்த மந்திரம் சித்தியடையும் நாம் என்ன காரணத்திற்காக அந்த மந்திரம் சொல்கிறோமோ அது உடனடியாக நிறைவேறும் என்பது திண்ணம்.

அதனால் எந்த ஒரு மந்திரத்தையும் 1 லட்சம் முறைக்கு மேல் சொல்லி வாருங்கள் அந்த மந்திரத்தின் மூலமாக பெரும் மாற்றம் உங்களுக்கு நிகழ்ந்தே தீரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews