மந்த்ராலயம் செல்லுங்கள் மனநிம்மதி அடையுங்கள்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிறந்தவர் மஹான் ராகவேந்திரர். தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நீண்ட காலம் வாழ்ந்தவர்.

இறைவன் மீது பக்தி கொண்ட இவர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

திருப்பதி, காளஹஸ்தி, காணிப்பாக்கம் கோவில்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலத்தில் அதிக மக்கள் செல்ல கூடியதாக இந்த மந்த்ராலயம் உள்ளது.

இவர் தனக்குத்தானே ஜீவ சமாதி கட்டிக்கொண்டவர்அந்த சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு, தான் 700 ஆண்டுகள் அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்திருந்தார் .

அந்த தருணத்தில் இருந்து ராகவேந்திரர் சுவாமி அந்த ஜீவ சமாதிக்குள்ளேயே வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என பக்தர்களின் நம்பிக்கை உள்ளது.

தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடமாக இந்த ராகவேந்திரர் மந்த்ராலயம் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment