மனிதனின் துன்பங்களும் தீர்வுகளும்

78214f9456f93bd58501a7667b391ca9-3

மனிதர்களுடைய துன்பங்களும்,அதன் தீர்வுகளும்

உலகில் பிறந்து வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவரும் ஏன் இந்த நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்?

ஜன்ம ஜாதகப்படி உண்டாகும் செருக்கு(பரிவர்த்தனை யோகம் என்று ஜோதிடத்தில் கூறுவர்), செல்வச் செருக்கு,கல்விச் செருக்கு(வித்யா கர்வம்),புகழால் உண்டாகும் செருக்கு,புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்ததால் உண்டான செருக்கு, மாந்திரீக வித்தை கற்றதால் உண்டான செருக்கு போன்ற சில பல செருக்குகளால் (திமிரால்) போன 4 பிறவிகளில் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே இந்த பிறவி எடுத்திருக்கின்றோம்.

நாம் ஒவ்வொருவருக்குமே இந்த பிறவி எடுக்கும் வரை, இன்னும் 2,00,000 ஜன்மங்கள் பிறவிப் பாக்கி இருக்கின்றது;இந்த பிறவி முடியும் போது,அது 6,00,000 பிறவிகளாக அதிகரித்துவிடுகின்றது;

போன 4 பிறவிகளில் செய்த புண்ணியச் செயல்களால் இந்த பிறவியில் இந்த வாழ்க்கைத் துணை,குழந்தைச் செல்வம்,சொத்துக்கள்,புகழ்,இந்த விதமான திறமை,இன்ன தொழில்,நட்பு வட்டம் என்று அமைந்துவிடுகின்றது;

போன 4 பிறவிகளில் செய்த பாவச் செயல்களால் இந்த பிறவியில் கடன்,வங்கிக் கடன்,கந்து வட்டி,நோய்கள்,அவமானம்,எதிரிகள்,துரோகிகள்,சொந்த வீடு அமையாமல் இருப்பது,வாழ்க்கைத் துணையிடம் இருந்து பிரிந்து வாழ்வது,பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் அல்லது வாரிசுகளின் அன்பும்,அரவணைப்பும் கிடைக்காமல் இருப்பது,ஏமாற்றங்கள்,தற்கொலை முயற்சி,மனக்குழப்பமான வாழ்க்கை,இந்து தர்மத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுதல்,வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவே மதம் மாறுதல் போன்றவைகள் அமைந்துவிடுகின்றன;

ஆன்மீகத்தின் அடிப்படை உண்மைகள் அறியாமல் பல கோடி மக்கள் நமது பாரத நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்;புத்திசாலித்தனமான நாத்திகப் பிரச்சாரம்,பிரபலமான கோவில்களில் நடைபெறும் அட்டூழியங்கள்,ஜோதிடத்தில் நடைபெறும் பித்தலாட்டங்கள்,நாத்திகக் கட்சியினர் செய்யும் சூதுவாது நிறைந்த செயல்கள் போன்றவைகளால் பல கோடி மக்களுக்கு ஆன்மீகம்,தெய்வத்தின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகின்றது;

இதை போலி ஆன்மீகவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்;1964 முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் நாத்திகவாதிகள் செய்த பலவிதமான சதிச் செயல்கள்,நாத்திகப் பிரச்சாரங்களால் இப்படிப்பட்ட அவநம்பிக்கை இந்து மக்களிடையே உருவாகிவிட்டது;இது மதமாற்ற பயங்கரவாதம் வெற்றி பெற காரணமாகி விடுகின்றது;

எந்த ஒரு மந்திரவாதியும் தான் கற்ற மாந்திரீக வித்தைகளை,தனக்குச் சமமான இன்னொரு மந்திரவாதியிடம் காட்டுவது கிடையாது;ஆன்மீகம்,தெய்வ நம்பிக்கையோடு மட்டும் வாழும் அப்பாவி மக்களிடம் தான் தனது மாந்திரீக வித்தையை காட்டுவது வழக்கம்;இந்த கொடூரமான கலியுகத்திலும் கூட,பல லட்சம் இந்து மக்கள் அற்புதமான ஆன்மீக முன்னேற்றம் அடையவே மனிதப் பிறவி எடுத்துள்ளார்கள்;அதை அவர்கள் உணரும் முன்பாகவே,தீமை மட்டும் செய்யும் மந்திரவாதிகளால் அந்த ஆன்மீக முன்னேற்றத்தை இழந்துவிடுகின்றார்கள்;

1.பல நாட்கள்,பல மாதங்கள்,பல ஆண்டுகள் பறந்து செல்வது போன்று கனவு காண்பது

2.பறக்கும் குதிரையை கனவில் அடிக்கடி காண்பது

3.சூரியனை நோக்கி பறந்து செல்வது போன்று அடிக்கடி கனவு காண்பது

4.பறக்கும் யானையை கனவில் அடிக்கடி காண்பது

5.மிகவும் பழமையான கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு சன்னதியிலும் சாமி கும்பிடுவது போல அடிக்கடி கனவு காண்பது

6.தெய்வ உருவங்களை மிக அருகில் தரிசிப்பது போன்று அடிக்கடி கனவில் பார்ப்பது

7.கிராபிக்ஸ் செய்யப்பட்ட பறக்கும் பாம்பினை அடிக்கடி கனவில் பார்ப்பது;அதன் மேல் தோலானது பளபளப்பாக மின்னுவது போல தெரிவது

8.தேவலோகத்தை அடிக்கடி கனவில் பார்ப்பது

இப்படிப்பட்ட கனவுகளில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கனவு ஒருவருக்கு பல ஆண்டுகளாக வந்தால்,அவருக்கு இந்த பிறவியில் மிக முக்கியமான ஆன்மீக முன்னேற்றம் கிடைக்க இருக்கின்றது என்று அர்த்தம்;அந்த ஆன்மீக முன்னேற்றத்தை அடையும் வரையிலும் இந்தமாதிரியான கனவு வந்து கொண்டே இருக்கும்;

பெரும்பாலானவர்களுக்கு 12 வயது அல்லது 15 வயது முதல் இம்மாதிரியான கனவினை அடிக்கடி காண ஆரம்பிப்பார்கள்;ஆனால்,இவர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் 30 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் கிடைக்கும்;

இதன் உள்ளார்த்தம் இன்று பலருக்குத் தெரிவதில்லை;இதன் அர்த்தம் தெரியும் முன்பாகவே இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை போலி ஆன்மீகவாதிகளால் இழந்துவிடுகின்றார்கள்;

இழந்த ஆன்மீக முன்னேற்றத்தை திரும்பப் பெற வராஹி ஜபம் தினமும் செய்து வர வேண்டும்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் முதல் குறைந்தது மூன்று ஆண்டுகள்,அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை வராஹி ஜபம் செய்து வந்தால்,இழந்த ஆன்மீக முன்னேற்றம் திரும்ப கிடைத்துவிடும்;பலருக்கு திரும்பக் கிடைத்திருக்கின்றது;

வராஹி ஜபத்தை எப்போதும் இரவில் மட்டுமே ஜபிக்க வேண்டும்;ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் ஜபிக்க வேண்டும்;ரகசிய ஜபமுறைகளில் முக்கியமானது வராகி ஜபம்;எனவே,எல்லோருக்கும் தெரியும்படியாக வராகி ஜபம் செய்வதை தவிர்க்க வேண்டும்;உங்களிடம் பழகுபவர்கள் அனைவரும் உங்களை நேசிப்பார்கள் என்று எண்ண வேண்டாம்;

கஷ்டம் இல்லாதவர்கள் என்று யாருமே கிடையாது;ஆனால்,நம்முடைய கஷ்டத்தைப் பிறரிடம் சொல்லும் போதுதான் ஒரு திருப்தி கிடைக்கின்றது;கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் போனால் பலவிதமான நோய்கள் வருகின்றன;ஆஸ்துமா,ரத்த அழுத்தம்,ஞாபக மறதி போன்ற நோய்கள் வந்துவிடுகின்றன;

நமது கஷ்டத்தை வெளியில் சொன்னால் ஒரு ஆத்ம திருப்தி;ஆனால்,எல்லோரிடமும் நம் கஷ்டத்தைச் சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்ல முடியாது;மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரியாது;

பிறகு,யாரிடம் போய் நமது கஷ்டத்தைச் சொல்வது?

ஈசனாகிய அருணாச்சலேஸ்வரரிடம் மட்டும் தான் நமது கஷ்டத்தை சொல்ல வேண்டும்;அதுவும் கிரிவலம் புறப்படும் போது சொன்னால்,அதை காது கொடுத்துக் கேட்பார் நமது ஜன்மாந்திர அப்பா அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார்!கிரிவலத்தை முடித்த உடனே நமது கஷ்டங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அருள் புரிவார்;கடந்த 25 ஆண்டுகளில் அடியேன் அனுபவத்தில் கண்ட ஆன்மீக உண்மை இது;

அதே சமயம்,நமது கஷ்டங்களை எல்லாம் அருணாச்சலேஸ்வரரிடம் கூறி பிரார்த்தனை செய்தால்,நமது கஷ்டத்தை நிவர்த்தி செய்தாலும் சரி; அல்லது செய்த பாவத்திற்கு தண்டனை கொடுத்தாலும் சரி;அல்லது கஷ்டத்தை மாற்றாமலேயே அதைத் தாங்குகின்ற மனப் பக்குவத்தை நமக்கு கொடுத்தாலும் சரி;என்ற மனோபாவம் எப்போது நமக்கு வருகின்றதோ,அப்போது ஈசனாகிய அருணாச்சலேஸ்வரர் நமது கஷ்டங்களை வாங்கிக் கொண்டு நமக்கு மன உளைச்சல் இல்லாத வாழ்க்கையை தருகின்றார்;

கஷ்டங்கள் நிரந்தரமாகத் தீர பலவிதமான பரிகாரங்கள்,பூஜைகள்,தியான முறைகள் இருக்கின்றன;

மிக எளிமையான பரிகாரம் என்னவென்றால் ஒவ்வொரு சிவராத்திரிக்கும் அண்ணாமலை கிரிவலம் வருவதுதான்;3 ஆண்டுகளுக்குள் 108 முறையும்,10 ஆண்டுகளுக்குள் 1008 முறையும் அண்ணாமலை செல்வதுதான்;

108 முறை கிரிவலம் நிறைவு செய்துவிட்டாலே இப்பிறவி முழுவதும் கஷ்டங்கள் தீர்ந்து சுகமான வாழ்க்கை வாழ முடியும் என்பது அனுபவ உண்மை ஆகும்;

1008 முறை கிரிவலம் நிறைவு செய்துவிட்டாலே இதுவரை எத்தனை பிறவிகளில் செய்த அனைத்து கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;இதில் புண்ணிய கர்மாவும்,பாவ கர்மாவும் சேர்ந்தே தீர்ந்துவிடும்;திரும்பவும் இந்த பூமியில் பிறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது;முக்தி கிடைத்துவிடும்;

நமது நட்சத்திர சத்குருவின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுவோம்;இதனால்,நமது அடுத்த கட்ட ஆன்மீக வாழ்க்கைக்கு தயாராகிவிடுவோம்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

ஜோதிடர்: வீரமுனி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.