ரஜினியுடன் சண்டைபோட்ட மனோபாலா… என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் பன்முகங்களோடு வலம் வரும் நடிகர் மனோபாலா இதுவரை 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார். இதுதவிர கிட்டத்தட்ட 175 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தற்போது வரை பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மனோபாலா தனக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் இடையே நடந்த சின்ன சண்டை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதன்படி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த மனோபாலா கூறியதாவது, “ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா படத்திற்கு நான்தான் டைரக்டர். சத்யா மூவிஸ்ல என்னதான் டைரக்டரா புக் பண்ணாங்க. ஆனா, இந்த விஷயம் நடிகர் ரஜினிகாந்துக்கு தெரியாது.
அப்போ வெளிநாட்டுல படப்பிடிப்ப முடிச்சிட்டு இந்தியா வந்த ரஜினிகாந்த் ஏர்போட்லயே பாட்ஷா படத்துக்கு சுரேஷ் கிருஷ்ணாதான் டைரக்டர்ணு சொல்லிட்டாரு. இது கேட்ட உடனே எனக்கு பயங்கர கோபம் வந்துருச்சு. உடனே அந்த கோபத்தோட நேரா ரஜினிகாந்த் வீட்டுக்கு போனேன்.
அவர நேருக்கு நேரா பார்த்து நான் என்ன சார் தப்பு பண்ணேன். நீங்க எப்படி ஒரு டைரக்டர மாத்தலாம்ணு கேட்டேன். அதுக்கு அவர் இந்த விஷயம் எதுவும் எனக்கு தெரியாது. பாலச்சந்தர் சார் சுரேஷ் கிருஷ்ணா ஓகேவான்ணு கேட்டாரு. அவர் கேக்குறப்ப நான் அதை மறுக்க முடியாதுல்ல. அதான் ஓகே சொன்னேன் அப்படினு சொன்னாரு.
அதுக்கப்புறம் அவங்க மனைவி லதா தான் மோர் கொடுத்து என் கோபத்தை தணிச்சாங்க. அப்புறம் என்ன ஒட்டறதுதான் ஒட்டும் அப்படின்ணு கிளம்பி வந்தேன்” என கூறியுள்ளார். ஒரு சின்ன கம்யூனிகேஷன் கேப்பால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை மனோபாலா தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
