அடேங்கப்பா, இப்படி ஒரு டீடெயிலிங்கா.. மஞ்சும்மல் பாய்ஸ் படத்துல யாரும் கவனிக்காத செம விஷயம்..

சமீப காலகட்டத்தில் தமிழ்நாட்டிலேயே தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி வரும் நிலையில் அதில் சமீபத்தில் வெளியாகும் பல மலையாள திரைப்படங்களும் சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியாகியிருந்த பிரேமலு, பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேசம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் கேரளாவில் ஹிட்டானது மட்டுமில்லாமல் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

மொழி என்பதை தாண்டி படத்தில் வரும் கதாபாத்திரங்களும், அதில் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கும் பல்வேறு நிகழ்வுகளும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருந்த நிலையில் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ஹிட் ஆகியிருந்தது. இதில் அனைவரையும் மிக எளிதாக கவர்ந்த திரைப்படம் என்றால் அது நிச்சயம் மஞ்சும்மல் பாய்ஸ் தான்.

சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கொடைக்கானலில் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கிளைமாக்ஸில் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் சரியான இடத்தில் வருவதால் ரசிகர்களின் இதயத்தை ஒரு நிமிடம் அந்த காட்சி தொட்டிருந்தது.

இதன் காரணமாக, தமிழ் ரசிகர்களின் இதயத்தை வென்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், 250 கோடி வரைக்கும் வசூல் வசூல் செய்து மலையாள திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகவும் அமைந்திருந்தது. ஆனால் அதே வேளையில் இந்த திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீநாத் பாஸி குகைக்குள் விழுவது மட்டுமில்லாமல் ஒரு பாறையின் மீது அப்படியே தடைப்பட்டு நிற்பது போன்று காட்சி வரும்.

அப்படி வேகமாகச் சென்றவர் எப்படி ஒரு இடத்தில் சரியாக நின்றிருக்க முடியும் என்ற கேள்விகளும் குழப்பங்களும் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் தான் இதற்கான விடையை இயக்குனர் சிதம்பரமே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த படத்தில் அதற்கு முன்பாக வரும் ஒரு காட்சியில் தனது சகோதரனின் பெல்ட்டை ஸ்ரீநாத் பாசி அணிந்து கொண்டு கொடைக்கானல் கிளம்புவது போன்ற காட்சி வரும்.

இப்படி அவர் வேகமாக சென்றும் அந்த பெல்ட்டின் காரணமாக தான் அந்த பாறையில் தடைபட்டு நின்றதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் பாறைக்கு நடுவே அந்த காட்சியை எடுத்ததால் வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் தான் அந்த பெல்ட் டீடைய்லிங் சரியாக தெரியாமல் போனது என்றும் அடுத்த படத்தில் இதன் இது போன்ற காட்சிகளை சரியாக செய்து விடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...