Entertainment
கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் படத்தில் கவுதம் மேனன் நாயகி
சமீபத்தில் வெளியா பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அடல்ட் காமெடி திரைப்படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நாயகன் கவுதம் கார்த்திக் அடுத்து நடிக்கவுள்ள ‘தேவராட்டம் என்ற படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தயாரிப்பாளர் .ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்க சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணியை செய்கின்றனர். ‘முத்துராமலிங்கம்’ படத்திற்கு பின்னர் கவுதம் கார்த்திக் நடிக்கும் கிராமத்து படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்ப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
