Connect with us

மணியரசனும், சீமானும் பாஜகவின் கைக்கூலிகள், சுப.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

seeman and maniarasan

செய்திகள்

மணியரசனும், சீமானும் பாஜகவின் கைக்கூலிகள், சுப.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

பாஜகவினர் தமிழகத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடுவார்கள். மணியரசன், சீமான் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திராவிட நட்புக் கழகத்தின் அறிமுகக்கூட்டம் சேதுரெத்தினபுரத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது,

தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசினார்கள் என்ன செய்வது கருத்தோடு இருப்பவர்கள் கருத்தாக இருப்பார்கள் வெறும் செருப்போடு இருப்பவர்கள் செருப்பாகத்தான் இருப்பார்கள். தமிழ்நாட்டைமட்டுமல்ல திமுகதான் இனி அதிமுகவையும் காப்பாற்ற வேண்டும், இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்களை வெட்டி வீழ்த்தவேண்டும் என்று சொன்னால் முதலில் பெரியாரிஸ்ட்டுகளை வெட்டி வீழ்த்திவிடுதான் அவர்களை வீழ்த்த முடியும்,

பாஜகவினர் சூத்திரம் வைத்துள்ளார்கள் இரண்டு கட்சிகள் மாநிலத்தில் வலிமையாக இருந்தால் இரண்டாவது இருக்கும் கட்சியை அழி இரண்டாம் இடத்தை பிடி என்பதுதான், அதுதான் அவர்களின் நோக்கம் அவர்கள் தற்போது அதிமுகவை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அது எல்லோருக்கும் தெரியும், இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் அவர்களாக சண்டைபோட்டுக் கொள்ளவில்லை சண்டை போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவை அழித்து விட்டு தாங்கள் வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்குத் தெரியும் திமுகவின் மீது கைவைக்க முடியாது என்று அவர்கள் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை மட்டுமல்ல ஏழாவது இடத்துக்கூட வர முடியாது. தாமரைக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை வராது. ஆனால் அவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.

அதற்கு துணையாக சில மோசமான அமைப்புகளை அவர்கள் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். மணியரசன், சீமான் பாஜகவின் கைக்கூலிகள். அவர்கள் முழுக்க முழுக்க திராவிடத்தை எதிர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளனர். பாஜகவோடு இருந்தவன் யாரும் வாழ்ந்ததில்லை. என அவர் பேசினார்.

கூட்டத்தில் மனித நேயக்கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிட நட்புக்கழகத்தினர், மற்றும் திராவிடர் கழகத்தினர், திமுகவினர் கலந்து கொண்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top