
தமிழகம்
தாம்பரத்தில் பராமரிப்பு: நாளை முதல் ஆறு புறநகர் ரயில்கள் ரத்து..!!
தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக ரயில்வே பாதைகள் பராமரிப்பு பணிகள் அதிகமாக நடைபெறுகிறது. இதனால் புறநகர் ரயில்கள் பெரும்பாலான நாட்களில் இயக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையில் தொடங்கி தாம்பரம் இடையே நாளை முதல் ஜூன் 23ஆம் தேதி வரை ஆறு புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ஜூன் 15, 16, 17, 18, 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில் 15, 16, 17, 18, 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரயில் ஜூன் 15 மற்றும் 18 20 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
