மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி சஸ்பெண்ட்!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினத்தில் மக்களவை கூட்டமானது மதியம் 2 மணிக்கு கூடியது. இதில் அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து அமலில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவையில் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சபாநாயகர் முடிவெடுத்தார்.

அதன்படி, பாராளுமன்ற அமைச்சர் தலைமையில் குரல் வாக்கெடுப்பு எடுக்கப் பட்டு மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் உறுப்பினர்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் மக்களவைத் கூட்டமானது நாளை காலை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment