நேற்றைய தினம் திடீரென்று திரிபுரா மாநிலத்தில் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி திரிபுரா மாநிலத்தில் புதிய முதல்வராக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டார். அகர்தலாவில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேப் பதவி விலகியதை அடுத்து, அடுத்த புதிய முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மாணிக் சாகா. இந்த நிலையில் திரிபுரா முதலமைச்சராக அவர் இன்றைய தினம் பதவியேற்று கொண்டுள்ளார்.
முதலமைச்சர் பதவியைப் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ததை அடுத்து மாநில முதலமைச்சராக இன்று பதவி ஏற்றார். திரிபுரா மாநில பாஜக தலைவரான மாணிக் சாகா சமீபத்தில்தான் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற மாணிக் சாகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.