பொன்னியின் செல்வன் குறித்து சர்ச்சையை கிளப்பிய மணிரத்தினம் மனைவி! வெடித்த சர்ச்சை !

பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், மேலும் இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்றும், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும்.

கல்வியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது. படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், லால், ஆர் பார்த்திபன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

4

படத்தின் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்களில் இடம் பிடித்துள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் பட குழுவினர் தீவிரமாக பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று ஹைதராபாத்தில் படத்தின் பிரமோஷனில் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி சில கருத்துக்களை கூறினார். படத்தின் படப்பிடிப்புகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் எடுத்தாக கூறினார்.இதை சிலர் சிரித்து இது தெலுங்கு படம் என்று அவர் கூறியதாக பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment