மங்களூரு குண்டுவெடிப்பு! வெளியானது பரபரப்பு CCTV காட்சி!!

மங்களூரு குண்டுவெடிப்பில் ஆட்டோவில் பயணித்த ஷரீக் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பெரிய பைகளுடன் மங்களூரு வீதிகளில் உலா வரும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஷரீக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்: எதற்காக தெரியுமா?

இந்நிலையில் கைதான ஷரீக் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். அதே செல்போல் செல்போன், வெடிகுண்டு தயாரிக்க ஷரீக் பயிற்சி பெற்றதாக அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஷாரீக்கின் பழைய புகைப்படத்தில் முகத்திற்கும், தற்போதைய முகத்திற்கும் வித்தியாசம் இருப்பதாக மங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில்: வானிலை அப்டேட்!!

மேலும், கோவை சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுக்கும், ஷெரீக்கும் ஏற்கெனவே தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மங்களூரு வீதிகளில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.