“மாண்டஸ் புயல்” – மெட்ரோ ரயில் சேவையில் மாற்றமா?

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லையென மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகி மாண்டஸ் இன்று நள்ளிரவு புதுச்ரேி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

திருமண நிகழ்ச்சியில் சோகம்! சிலிண்டர்கள் வெடித்து 2 குழந்தைகள் பலி

இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றைய தினத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறதா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது புயல் கரையை கடக்கும் போது மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் இல்லையென்றும் வழக்கம் போல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நள்ளிரவு முதல்! ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்..!!

அதன் படி, அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவையானது வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.