மாண்டஸ் புயல் எச்சரிக்கை: நாளை 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக செங்கல்பட்டு உட்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழை எச்சரிக்கையாக கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்.

180 கி.மீ தென்கிழக்கில் மையம்… மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்..!!

அதன் ஒரு பகுதியாக சென்னை, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளைய தினத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் நலன் கருதி இத்தகைய விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.