‘அந்த 3 மணி நேரம்’… அலறவிடப்போகும் ‘மாண்டஸ்’ புயல் – பரபரப்பு எச்சரிக்கை!

புதுவை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர்

மாண்டோஸ் தீவிர புயல் இன்று காலை வலு விழுந்து புயலாக காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தெற்கு தென் கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கு சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 2.30 மணிக்கும் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும் என்றும், அப்படி கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று அடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தார்.

கனமழைக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர்,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்.

தருமபுரி , சேலம்,நாமக்கல், திருச்சி,தஞ்சாவூர், டெல்டா ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மற்றும் சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.