மீண்டும் “முக கவசம்” கட்டாயம் : ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் !!!
இந்தியாவில் டெல்லி, உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மாற்றம் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதை கண்காணிக்க வேண்டும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்தவும், அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா என்பதை கண்டறியமாறு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று கண்டறிய பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருமாறு கூறியுள்ளார். மேலும், புதிய ’எக்ஸ்இ’ என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது வரையில் தமிழகத்தில் இல்லை என அவர் கூறியுள்ளார்.
